spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"சேலத்திற்கு மேலும் திட்டங்கள் வர உள்ளன"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“சேலத்திற்கு மேலும் திட்டங்கள் வர உள்ளன”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

-

- Advertisement -

 

"சேலத்திற்கு மேலும் திட்டங்கள் வர உள்ளன"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Photo: TN Govt

சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் இன்று (ஜூன் 11) காலை 11.00 மணிக்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் ரூபாய் 170 கோடி மதிப்பில் 50 ஆயிரம் பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதைத் தொடர்ந்து, ரூபாய் 1,367 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூபாய் 235 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

we-r-hiring

நடராஜன் கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைக்கிறார் தினேஷ் கார்த்திக்!

ரூபாய் 653 கோடி மதிப்பில் இளம்பிள்ளை கூட்டுக் குடிநீர் திட்டத்தையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் பணிபுரிய சேலத்தில் கருணாநிதி தங்கியிருந்த போது, தி.மு.க. உருவானது. சேலத்தில் இருந்து தான் சென்னைக்கு சென்றார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. சேலத்துக்கும், கருணாநிதிக்கும் உள்ள உறவு அன்பான உறவு. சேலத்திற்கு ஏராளமான திட்டங்களை செய்துள்ளோம்; இன்னும் அதிக திட்டங்கள் வரவுள்ளன. சேலத்தில் மாபெரும் தொழிற்பூங்கா அமைக்க நிலம் தேர்வுக்கான பணிகள் நிறைவடைய உள்ளன.

ஜவுளி பூங்காவிற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. தமிழகத்தில் மாவட்டங்கள்தோறும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கட்டணமில்லா இலவச பேருந்து பயணத்தை சேலத்தில் மட்டும் ரூபாய் 14 கோடி முறை பெண்கள் பயன்படுத்தியுள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து குறித்த நேரத்தில் நாளை தண்ணீர் திறந்து விடப்படும். மூன்றாவது ஆண்டாக தொடர்ந்து குறித்த நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

பேசின் பிரிட்ஜ் அருகே மின்சார ரயில் தடம் புரண்டது!

அ.தி.மு.க. ஆட்சியில் ‘உதய் திட்டத்தில்’ கையெழுத்திட்டது தான் மின்கட்டண உயர்விற்கு காரணம். ஜி.எஸ்.டி., உதய் என மத்திய அரசின் திட்டங்களுக்கு அ.தி.மு.க. கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்திட்டுள்ளது. நம்பர் ஒன் மாநிலம் என்று பெயர் எடுப்பது தான் எனக்கு பெருமை என நான் நினைக்கிறேன். நிதி நெருக்கடி இருந்த போதிலும் வளர்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம். வெளிநாடுகளுக்கு சென்று முதலீடு செய்ய அழைத்தால் தான் முதலீட்டாளர்கள் ஆர்வத்தோடு வருவார்கள்.

முதலீடு குறித்த பயணத்தைக் கூட உள்நோக்கத்தோடு சிலர் விமர்சனம் செய்கின்றனர். மக்கள் பணியாற்றவே எனக்கு நேரம் போதவில்லை. வெளிநாடு பயணங்களைக் கொச்சைப்படுத்துவோர் குறித்து எனக்கு கவலையில்லை” என்று கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

MUST READ