- Advertisement -
ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறப்பு
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
2023_ 2024 ஆம் ஆண்டிற்கான அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வியாண்டு நாள்காட்டியை அன்பில் மகேஷ் வெளியிட்டார். அதில், தமிழகத்தில், 1 முதல் 5 வகுப்பு வரை பள்ளிகள் – ஜூன் 5 ஆம் தேதி திறக்கப்படும், 6 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகள் – ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படும். அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்தவுடன் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் 515 பள்ளிகள் விதிமுறைகளை பின்பற்றாமலேயே தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 18 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 8 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.