spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகன்னியாகுமரியில் 2வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை..

கன்னியாகுமரியில் 2வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை..

-

- Advertisement -

தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 2வது நாளாக இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 9ம் தேதி வரை மழை பெய்யக்கூடுமென வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இதனிடையே தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் கனமழையும், சில நேரங்களில் சாரல் மழையும் என இடைவிடாது மாறி மாறி மழை பெய்த வண்ணம் உள்ளது. இந்த தொடர் மழை காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மழை
கோடை மழை

அத்துடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்குள்ள நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர் மழை மற்றும் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக கன்னியாகுமரியில் , இன்றும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக இன்றும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

we-r-hiring

 

 

MUST READ