
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகையை நியமித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். அதேபோல், தமிழ்நாடு சட்டப்பேரவையின் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக அக்கட்சியின் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘அமரன்’…… புதிய போஸ்டர் வெளியீடு!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சட்டமன்றக் குழு தலைவரை காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது.
தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த செல்வப்பெருந்தகை, “சமூக நீதி மீது இந்தியா முழுவதும் நம்பிக்கை உள்ள இயக்கம் காங்கிரஸ். காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளது நாடறிந்த உண்மை. ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்படுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
‘SK23’ படக்குழுவுடன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடும் சிவகார்த்திகேயன்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகத் திறம்பட பணியாற்றியமைக்காக கே.எஸ்.அழகிரிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தனது கடிதத்தில் நன்றியும் தெரிவித்துள்ளார்.