
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை நாளைக்கு (ஜூலை 12) ஒத்திவைத்தார் உயர்நீதிமன்ற நீதிபதி.
ஜவான் ட்ரைலரை பார்த்து பிரமித்த லோகேஷ் கனகராஜ்!
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இன்று (ஜூலை 11) பிற்பகல் 03.30 மணிக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, கைதுக்கான ஆவணங்களை அமலாக்கத்துறை வழங்கிய போது, செந்தில் பாலாஜி ஏன் பெற மறுத்தார்? கைது நடவடிக்கை சட்ட விரோதம் என்றால் அமலாக்கத்துறை அதிகாரிகளைக் கூண்டில் ஏற்றி இழப்பீடு பெற்றுக் கொள்ளுங்கள் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “நீதிபதி நிஷா பானுவின் தீர்ப்பு சரியானது. ஜூன் 13- ஆம் தேதி சோதனை தொடங்கியது முதல் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைத்தார். விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என அமலாக்கத்துறையினர் குற்றம்சாட்டுகின்றனர். அமலாக்கத்துறைக்கு புலன் விசாரணை செய்யும் அதிகாரம் இல்லை. அமலாக்கத்துறையின் விசாரணை என்பது கைதுடன் முடிந்து விடுகிறது. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்ற அமலாக்கத்துறை அதை ஏன் அமல்படுத்தவில்லை? காவேரி மருத்துவமனை மருத்துவர்களிடம் சொல்லி உரிய ஏற்பாடுகளுடன் விசாரணை நடத்தியிருக்கலாமே?” என்று வாதிட்டார்.
டோவினோ தாமஸ் நடிக்கும் புதிய படம்….. பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்!
இதற்கு நீதிபதி, “நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்? செந்தில் பாலாஜியை விடுவிக்கும்படி, அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க முடியுமா?” என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நாளைக்கு (ஜூலை 12) ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.