செந்தில் பாலாஜி ஜாமின் மனு – உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது தவறு என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் வேண்டி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்நிலையில், இந்த பிணை மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என்றும், ஜாமின் மனுவை விசாரிக்க அதிகார வரம்புஇல்லை என்றும் சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவி, உயர்நீதிமன்ற உத்தரவு இல்லாமல் தன்னால் விசாரிக்க முடியாது என கருத்து தெரிவித்தனர்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, செந்தில்பாலாஜி மீதான வழக்கை எம்பி/ எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியதே தவறு, ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. மேலும் அனைத்து கோப்புகளையும், முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கும் மாற்றவும், ஜாமின் மனுவை விரைந்து விசாரிக்கவும் அறிவுறுத்தியது. சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டப்படி மத்திய அரசால் முதன்மை அமர்வு நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.