Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் 10ஆவது முறையாக நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் 10ஆவது முறையாக நீட்டிப்பு!

-

 

சிகிச்சைக்கு பின் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!
Video Crop Image

அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை 10ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் அரசு, தனியார் ஊழியர்கள் பாதி பேர் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு!

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 12- ஆம் தேதி கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமின் கோரி சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இரண்டு மனுக்களையும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல், இன்றுடன் (நவ.06) நிறைவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜியை சிறைத்துறை காணொளி மூலம் ஆஜர்படுத்தியது.

காரில் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல்

அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமல் உள்ள ஆவணங்களை வழங்கக்கோரி மனு தாக்கல் செய்தார்”. இது குறித்து பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 10ஆவது முறையாக நவம்பர் 22- ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

MUST READ