spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபாரா ஆசிய விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியம்மன் தங்கவேலுவுக்கு குவியும் வாழ்த்து!

பாரா ஆசிய விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியம்மன் தங்கவேலுவுக்கு குவியும் வாழ்த்து!

-

- Advertisement -

 

பாரா ஆசிய விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியம்மன் தங்கவேலுவுக்கு குவியும் வாழ்த்து!
File Photo

4வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் நிலையில், ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் கலந்துக் கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த மாரியம்மன் தங்கவேலு, வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

we-r-hiring

பா.ஜ.க.வில் இருந்து விலகினார் நடிகை கௌதமி!

அந்த வகையில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளின் உயரம் தாண்டும் ஆட்டத்தில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக அவருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், இனிவரும் ஆட்டங்களில் மேலும் சாதிக்கவும் வாழ்த்துகிறேன்.

இதே உயரம் தாண்டும் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய வீரர் சைலேஷ் குமார், வெண்கலம் வென்ற இந்திய வீரர் இராம்சிங் ஆகியோருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாரா ஆசிய விளையாட்டு- தமிழக வீரருக்கு வெள்ளி!

அதேபோல், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் சகோதரர் மாரியப்பன் தங்கவேலு அவர்கள் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு மாநில பா.ஜ.க. சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ