
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால், சென்னை கோயம்பேட்டில் ஒரே இடத்தில் மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்களின் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொருட்களை வாங்க மக்கள் ஆர்வமுடன் குவிந்தனர்.
இந்தியாவின் தூய்மையான 100 நகரங்களில் தமிழகத்தின் ஒரு நகரம் கூட இல்லை – டிடிவி தினகரன்
பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை கோயம்பேடு சந்தையில் பொங்கல் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சந்தைக்கு கரும்பு, மஞ்சள், மா இஞ்சி உள்ளிட்டவை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகளவில் வந்துள்ளன. இதனால் பொங்கல் சிறப்பு சந்தையில் கரும்பு விலை குறைந்துள்ளது.
15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு நேற்று (ஜன.12) ரூபாய் 500 முதல் ரூபாய் 700 வரை விற்பனையான நிலையில், இன்று (ஜன.14) ரூபாய் 300 முதல் ரூபாய் 500 வரை விற்பனையாகிறது. அந்த வகையில், கரும்பு கட்டு ஒன்றுக்கு ரூபாய் 200 வரை விலை குறைந்ததால், சிறு வியாபாரிகள், மக்கள் ஆர்வமுடன் கரும்புகளை வாங்கிச் சென்றனர்.
மஞ்சள் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கொத்து 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. கரும்பு மற்றும் மஞ்சள் விளைச்சல் அதிகரித்ததன் காரணமாக, கோயம்பேடு சந்தையில் விலை குறைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றன.
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு!
ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மஞ்சள் 100- க்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டு வரப்பட்டுள்ளது.