spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஸ்ரீ வைகுண்டத்தில் மீட்கப்படும் பயணிகளுக்காக 13 பேருந்துகள் தயார்!

ஸ்ரீ வைகுண்டத்தில் மீட்கப்படும் பயணிகளுக்காக 13 பேருந்துகள் தயார்!

-

- Advertisement -

 

we-r-hiring

மழை, வெள்ளத்தால், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்படும் பயணிகளை அழைத்து வர 13 பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ வைகுண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் வரை பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 38 கி.மீ. தொலைவில் உள்ள வாஞ்சி மணியாச்சிக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

விஜய்-க்கு தங்கையாக நடிக்கும் சுந்தர் சி பட நடிகை…. ‘தளபதி 68’ அப்டேட்!

வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு இயக்கும் சிறப்பு ரயிலில் பயணிகள் செல்லவுள்ளனர். ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக திருச்செந்தூரில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. குலசேகரப்பட்டினத்தில் 18.4 செ.மீ., ஸ்ரீ வைகுண்டத்தில் 17.4 செ.மீ., சாத்தான்குளத்தில் 15.6 செ.மீ., தூத்துக்குடியில் 13.7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் பட்டத்தில் என்ன பெருமை இருக்கிறது…. வைரலாகும் பிரபல நடிகையின் பேச்சு!

இதனிடையே, மூன்றாவது நாளாக, உணவு, குடிநீர் இல்லாமல் தவித்து வருகிறோம் என்று பயணிகள் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

MUST READ