Homeசெய்திகள்தமிழ்நாடுஸ்ரீரங்கம் கோயில் கோபுர சுவர் இடிந்து விழுந்தது

ஸ்ரீரங்கம் கோயில் கோபுர சுவர் இடிந்து விழுந்தது

-

- Advertisement -

ஸ்ரீரங்கம் கோயில் கோபுர சுவர் இடிந்து விழுந்தது

ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு நுழைவு வாசல் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதிகள் இடிந்து விழுந்தது.

கோபுரம்

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில். இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் ராஜ கோபுரம், வெள்ளை கோபுரம், ரங்கா ரங்கா கோபுரம் உள்ளிட்ட பெரிய கோபுரங்களும், கோவிலை சுற்றி சிறிய சிறிய கோபுரங்கள் என மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளது. அதில் கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் இருக்கும் கோபுரத்தில் முதல் மற்றும் இரண்டாவது அடுக்குகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விரிசல் ஏற்பட்டது. மேலும் அது உடைந்து விழாமல் இருக்க கட்டைகள் விரிசல் ஏற்பட்டுள்ள இடத்தில் வைக்கப்பட்டிருந்தது.

கோயில்

கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் வழியாக தினசரி பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் திருக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கடந்து செல்வார்கள். கோவில் கோபுரம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.67 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும் என கோவில் நிர்வாகத்தினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கோபுரத்தின் முதல் அடுக்கில் விரிசல் ஏற்பட்டிருந்த பகுதி இடிந்து விழுந்துள்ளது.

கோபுரத்தில் இருந்து விழுந்த கற்களை அகற்றும் பணியில் கோவில் ஊழியர்களும் மாநகராட்சி ஊழியர்களும் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது அந்த பகுதியில் பொதுமக்கள் செல்லாமல் இருக்க பேரிக்காடுகளைக் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

MUST READ