spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட மனுக்கள் கிடப்பில் போடப்பட்டது – செல்வப் பெருந்தகை கண்டனம்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் கிடப்பில் போடப்பட்டது – செல்வப் பெருந்தகை கண்டனம்

-

- Advertisement -

மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உன்னத திட்டமான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் வைகை ஆற்றில் வீசப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட மனுக்கள் கிடப்பில் போடப்பட்டது – செல்வப் பெருந்தகை கண்டனம்மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதற்கு பின்னால் தமிழ்நாட்டு அரசிற்கு களங்கம் விளைவிக்க சதி நடப்பதாக சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முதல்வர் கொண்டுவந்த சிறந்த திட்டத்தை அலட்சியமாக கையாண்ட அதிகாரிகளின் செயல் வன்மையாக கண்டிக்கதக்கது. மனுக்கள் என்பது சாதாரண காகிதம் அல்ல, அவை மக்கள் வாழ்வின் நம்பிக்கை. மக்கள் மனுக்களை மதிப்பது என்பது ஜனநாயகத்தின் அடிப்படை. மேலும் இதுபோன்ற செயல்கள் மக்களின் நம்பிக்கையை குலைக்கும் செயலாகும்.

முதல்வரின் திட்டம் வெற்றிகரமாக நடைபெற காங்கிரஸ் உறுதியாக ஆதரிக்கிறது. இவ்வாறான அலட்சியம் இனி நடைபெறாமல் இருந்திட சம்மந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளாா்.

என்.ஆர்.இளங்கோ இல்லத் திருமணம் – முதல்வர் பங்கேற்பு

we-r-hiring

MUST READ