புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வீட்டில் தனது தாயார் திட்டியதாக எறும்புக்கு போடும் பூச்சிக்கொல்லி மருந்தை அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த நிலையில் அவரின் உடல் நிலையை பார்த்து சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள் அந்த மாணவியை ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பாத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த மனைவி ஒருவர் இன்று பள்ளிக்கு வந்த போது மயங்கி நிலையில் இருந்துள்ளார். இதனை கவனித்த ஆசிரியர்கள் அது குறித்து அந்த மாணவியிடம் கேட்டபோது,தனது தாயார் தன்னை வீட்டில் திட்டியதால் எறும்புக்கு போடும் பூச்சிக்கொல்லி பவுடரை உட்கொண்டதாக கூறியுள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக அந்த மாணவியை அழைத்துக்கொண்டு போய் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.மேலும் இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவலும் தெரிவித்துள்ளனர்.தற்போது சம்பந்தப்பட்ட மாணவிக்கு ஆலங்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.மாணவி தற்போது நலமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
