Homeசெய்திகள்தமிழ்நாடுமாநில அரசைக் கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக சுப்ரமணிய சுவாமி எச்சரிக்கை!

மாநில அரசைக் கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக சுப்ரமணிய சுவாமி எச்சரிக்கை!

-

 

மாநில அரசைக் கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக சுப்ரமணிய சுவாமி எச்சரிக்கை!
File Photo

சனாதன தர்மம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணிய சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.

மனோஜ் பாரதிராஜா இயக்கும் ‘மார்கழி திங்கள்’….. டீசர் ரிலீஸ் அப்டேட்!

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து பெரும் சர்ச்சையானது. இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு 262 பிரமுகர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

ஓய்வுப் பெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் எழுதியுள்ள அந்த கடிதத்தில், சமூகத்தில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது புகார் அளிக்கவில்லை என்றாலும், தாமாக முன்வந்து வழக்குப்பதிவுச் செய்யலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியுள்ள முன்னாள் எம்.பி. சுப்ரமணிய சுவாமி சர்ச்சைக் கருத்து விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தீபாவளி ரேஸில் இருந்து விலகுகிறதா அயலான்!?

சனாதனம் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் பேசினால், மாநில அரசைக் கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள உதயநிதி ஸ்டாலின், தனது சனாதன ஒழிப்புக் கருத்துக் குறித்து போலி செய்திகளை பா.ஜ.க.வினர் வருவதாகத் தெரிவித்துள்ளார்.

MUST READ