spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசூர்யா சிவா மீதான நடவடிக்கையை கைவிட்ட பா.ஜ.க.!

சூர்யா சிவா மீதான நடவடிக்கையை கைவிட்ட பா.ஜ.க.!

-

- Advertisement -

 

சூர்யா சிவா மீதான நடவடிக்கையை கைவிட்ட பா.ஜ.க.!
File Photo

பா.ஜ.க. பெண் நிர்வாகியிடம் ஆபாச வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டல் விடுத்த புகாரில், பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா சிவாவுக்கு மீண்டும் கட்சிப் பொறுப்பு வழங்கி பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

we-r-hiring

“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா நம் வசம்தான்”- தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இது குறித்து பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சூர்யா சிவா கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததின் அடிப்படையில், நவம்பர் 24 – ஆம் தேதி முதல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

அவருடைய வேண்டுகோளுக்கிணங்க சூர்யா சிவா, தான் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார்.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பட்டியலின இளைஞர்களை நிர்வாணப்படுத்தித் தாக்குதல்”- ஆறு பேர் கைது!

சூர்யா சிவா அ.தி.மு.க.வில் இணைய உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், பா.ஜ.க. அவர் மீதான நடவடிக்கையை கைவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ