
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இளைஞருக்கும், தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் தமிழ் பாரம்பரிய முறைப்படி, திருமணம் மதுரையில் நடைபெற்றது.

அர்ஜுன் தாஸ், வசந்தபாலன் கூட்டணியின் அநீதி….. டீசர் ரிலீஸ் அப்டேட்!
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திருட்செல்வன்- அனுஷியா தம்பதியின் மகள் நிவேதிகா. கடந்த 2015- ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டில் மேற்படிப்பைப் படிக்க சென்று அங்கேயே பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். அங்கு யோகா ஆசிரியரான எட்வர்ட்வீம் என்பவரை நிவேதிகா மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். தமிழக பாரம்பரியம் குறித்து எட்வர்ட்வீமின் பெற்றோரிடம் நிவேதிகா கூறியதும், இருவீட்டார் சம்மதத்துடன், தமிழ் பாரம்பரிய முறைப்படி, மணமகனின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.
மார்க் ஆண்டனி படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய விஷால்!
இதையடுத்து, தனக்கன்குளம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து தமிழக பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.