தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனா்.தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 8,71,239 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனா். இதில் 4,335,119 மாணவியர்களும், 4,36,120 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனா். 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனா். 10ம் வகுப்பு தேர்வில் 97 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனா். மொத்தம் உள்ள 206 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 90.52 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்விலும் ஆதிதிராவிடர் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96 சதவீதத்தை எட்டியுள்ளது.
மேலும், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 14 பள்ளிகளில் 10ம் பொது வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி அடைந்துள்ளனா். சென்னை சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவன் ஜெரால்டு ரூபன் 10-ம் வகுப்பு பொதுத் தோ்வில் 498 மதிப்பெண் பெற்றுள்ளாா். தமிழ், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களும், மற்ற பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளாா். சென்னையில் அரசு பள்ளியில் படித்த அரசு ஊழியரின் மகள் 10-ம் வகுப்பு பொதுத் தோ்வில் 500க்கு 492 மதிப்பெண் பெற்றுள்ளாா்.
தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமான மழை… உற்சாகத்தில் மக்கள்…