spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக பட்ஜெட் 2025 : இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடிய மகளிர் குழு

தமிழக பட்ஜெட் 2025 : இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடிய மகளிர் குழு

-

- Advertisement -

தமிழக நிதிநிலை பட்ஜெட்டை வரவேற்று அயப்பாக்கத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர். தமிழக பட்ஜெட் 2025 : இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடிய மகளிர் குழு தமிழகத்தின் நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை வாசித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த பட்ஜெட்டை வரவேற்று அயப்பாக்கம் மகளிர் சுய உதவி குழுவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்த பட்ஜெட் தமிழகத்திற்கு பெரும் முன்னேற்றத்தை கொடுக்கக் கூடிய பட்ஜெட் என்றும் பெண்களுக்கான பட்ஜெட் என்றும் மகளிர் சுய உதவி குழுவினர் தெரிவித்தனர். எல்இடி திரை மூலம் ஒளிபரப்பப்பட்ட பட்ஜெட்டை முழுவதுமாக அமர்ந்து பார்த்த பெண்கள் பட்ஜெட் உரை முடிந்ததும் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் உற்சாகத்துடன் கொண்டாடினர். மேலும் சாலையில் செல்லும் அனைவருக்கும் இனிப்புகளை வணங்கி உற்சாகமடைந்தனர்.

மாநிலத்தின் கடன்: நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் தான் உள்ளது – உதயசந்திரன் விளக்கம்

we-r-hiring

 

MUST READ