spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமாநிலத்தின் கடன்: நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் தான் உள்ளது – உதயசந்திரன் விளக்கம்

மாநிலத்தின் கடன்: நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் தான் உள்ளது – உதயசந்திரன் விளக்கம்

-

- Advertisement -

மாநிலத்தின் கடன், நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் தான் உள்ளது என நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் கூறியுள்ளாா்.

மாநிலத்தின் கடன்: நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் தான் உள்ளது – உதயசந்திரன் விளக்கம்

we-r-hiring

தமிழ்நாடு 2025-26ஆம் நிதியாண்டுக்கான பொதுப்பட்ஜெட்டை இன்று காலை 9.30 மணிக்கு மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மாநில அரசின் நிர்வாக திறமையை கேள்வி எழுப்பியுள்ளார். “தமிழ்நாடு கடன்சுமையில் தத்தளிக்கிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு கூட போதிய நிதி இல்லை. நிர்வாகத்திறமையற்ற அரசு செயல்பட்டு வருகிறது” என அவர் குற்றம்சாட்டினார்.

இதற்கிடையில், நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது: “தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.41,000 கோடியாக குறையும். மாநிலத்தின் கடன், நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் தான் உள்ளது. மத்திய அரசிடம் இருந்து பல திட்டங்களுக்கான நிதி கிடைத்திருந்தால், இந்த பற்றாக்குறை மேலும் குறைந்திருக்கும். ஜிஎஸ்டி வசூலில், குறிப்பாக டிஜிட்டல் சேவைகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

₹அடையாளம் நீக்கம்: திமுக அரசின் விளக்கம் என்ன? – அன்புமணி கேள்வி

MUST READ