ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது.திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்,தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற இருப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுகவில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கக்கூடிய நிலையில், திமுக தேர்தல் பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நடந்து முடிந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பதற்காக மண் – மொழி – மானம் காத்திட ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் புதிய உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தை அறிவித்து இருந்தார். தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் குறைந்தபட்சம் 30 சதவீதம் வாக்காளர்களை திமுகவில் உறுப்பினராக இணைக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த சூழலில் தான் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாகவும், 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாகவும் நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை இந்த கூட்டத்தில் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.