தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கையை ஏற்று சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் முதல் 18- ஆம் தேதி வரை சிறப்புக் காட்சிகள் திரையிட அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசுக்கு திரையரங்க உரிமையாளர் சங்கம் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. அதில் ஏற்கனவே போகி பண்டிகை, பொங்கல், திருவள்ளுவர் தினம், காணும் பொங்கல் என 14-1-2023 முதல் 17-1-2023 வரை 4 விடுமுறை நாட்களில் சிறப்பு காட்சிகளை நடத்த அனுமதி உள்ளது. வரும் 12-1-2023, 13-1-2023 ஆகிய நாட்களிலும் மற்றும் 18-1-2023 தேதியிலும் சிறப்புக்காட்சி நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி காட்சிகள் 13-ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை சிறப்பு காட்சிகள் ரத்து என நேற்று அறிவிப்பு வந்தது. தற்போது பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகி உள்ள புதிய படங்களுக்கான சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கையை ஏற்று 12, 13, 18 ஆகிய தேதிகளில் வழக்கமான காட்சிகளுடன், கூடுதலாக ஒரு காட்சியை திரையரங்குகளில் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
