விருதுநகர் மாவட்த்தில் ரூ.34.75 கோடியில் மினி டைடல் பூங்கா கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு டென்டர் அறிவிப்பு.தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், அரசு மினி டைடல் பூங்காக்கள் அமைக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் டைடல் பார்க் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும் எனவும் இதன் மூலம் ஐ.டி. நிறுவனங்கள் தொழில் தொடங்க ஊக்குவிக்கப்படும் வாய்ப்புள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டும் ஐ.டி. நிறுவனங்கள் குவிவதைத் தவிர்த்து, சிறிய நகரங்களிலும் தொழில் தொடங்க வாய்ப்புகளை ஏற்படுத்தி, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் டைடல் பார்க் அல்லது மினி டைடல் பார்க் அமைப்பதன் மூலமாக தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவதே அரசின் நோக்கமாக கொண்டு செயலாற்றுகிறது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் திறக்கப்பட்டுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. ரூ.34.75 கோடியில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்கள் கொண்டதாக இந்த மினி டைடல் பூங்கா வடிவமைக்கப்பட உள்ளது. இந்த பூங்கா அமைப்பதன் மூலம் சுமார் 600 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 12 மாதங்களில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், திட்ட மேலாண்மை ஆலோசகர், வரைபடம் மற்றும் வடிவமைப்புக்கான சேவைகள் வழங்கும் நிறுவனங்களையும் தேர்வு செய்ய அரசு டெண்டர் விண்ணப்பங்களை கோரியுள்ளது.
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களைத் தாண்டி, 2 மற்றும் 3-ம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை விரிவுபடுத்தி மாநிலம் முழுவதும் ஐ.டி. வளர்ச்சியை பரப்பும் நோக்கத்திலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொலிவு திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு வேலைவாய்ப்பு!