spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

-

- Advertisement -

தமிழ்நாடு, இந்தியாவுக்கே ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ததை தொடர்ந்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பல சவால்களை மீறியும் மாநிலம் வளர்ச்சி பாதையில் உறுதியாக முன்னேறி வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார். ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகள் மற்றும் நிதி குறைப்புகளை திறமையாக சமாளித்து, தமிழ்நாடு பல துறைகளில் முன்னேற்றச் சாதனைகள் படைத்துள்ளதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளின் சாதனைகளை ஒருங்கிணைத்த வடிவமாக இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளாா்.

we-r-hiring

‘திராவிட மாடல்’ ஆட்சி பொதுமக்கள் நலனை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருவதாகவும், அதன் தொடர்ச்சியாக “திராவிட மாடல் 2.0” மூலம் மேலும் பிரம்மாண்டமான வளர்ச்சி திட்டங்களுக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளாா்.

மேலும், திராவிட மாடல் அரசின் முக்கிய சாதனைகள், சமூகநீதி சார்ந்த திட்டங்கள் மற்றும் பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கான நலத்திட்டங்கள் குறித்து விரிவாக பதிவு செய்தார். அதே நேரத்தில், ஒன்றிய பாஜக அரசின் சில நடவடிக்கைகள் மாநிலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டினாா்.

தமிழ்நாடு வளர்ச்சியின் புதிய கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்றும், மக்கள் நம்பிக்கைக்கு இணங்க மேலும் பல முன்னேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளாா்.

தமிழகத்தில் ரூ.902 கோடி மதிப்பீட்டில் நவீன நூலகங்கள்…

MUST READ