Homeசெய்திகள்தமிழ்நாடுவலிப்பு நோயால் விழுந்த பாஜக நிர்வாகிக்கு தமிழிசை முதலுதவி

வலிப்பு நோயால் விழுந்த பாஜக நிர்வாகிக்கு தமிழிசை முதலுதவி

-

- Advertisement -

கமலாலயத்தில் வலிப்பு நோய் காரணமாக சரிந்து விழுந்த பாஜக நிர்வாகியை செய்தியாளர்களை சந்திக்க வந்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

வலிப்பு நோயால் விழுந்த பாஜக நிர்வாகிக்கு தமிழிசை முதலுதவி

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பிகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் சுற்றுச்சூழல் அணியின் மாவட்ட செயலாளராக உள்ளார்.இன்று பாஜக மைய குழு கூட்டம் கமலாலயத்தில் நடைபெற்ற நிலையில் மைய குழு கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக தீர்மானம் ஏற்றப்பட்டது குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் ,வானதி சீனிவாசன் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க வந்தனர்.

வலிப்பு நோயால் விழுந்த பாஜக நிர்வாகிக்கு தமிழிசை முதலுதவி

அப்பொழுது அங்கு இருந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்து ரத்த வாந்தி எடுத்தார் இந்த நிலையில் உடனடியாக தமிழிசை சௌந்தர்ராஜன் அவருக்கு முதலுதவி அளித்தார்.  பிறகு கீழே விழுந்த ராதாகிருஷ்ணனை மருத்துவமனைக்கு உடனிருந்தோர் அழைத்துச் சென்றனர்  இந்த சம்பவத்தால்  செய்தியாளர் சந்திப்பு சிறிது நேரம் தள்ளி வைக்கப்பட்டு பிறகு தமிழிசை சௌந்தரராஜன்  செய்தியாளர்களை சந்தித்தார்.

டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5 ல் தேர்தல் – அதே நாளில் ஈரோடு இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம்

MUST READ