
மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்திற்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து, பா.ஜ.க.வின் தேசிய தலைமை அறிவித்துள்ளது.மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்தையையும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மற்றொரு புறம், தேர்தல் நடத்தும் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இங்கிலாந்து அணி வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்த இந்திய அணி வீரர்கள்!
இந்த சூழலில், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 23 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து அறிவித்துள்ளது பா.ஜ.கவின் தேசிய தலைமை. அதன்படி, அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி ஆகியோர் தமிழகத்திற்கான பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்களின் கவனத்திற்கு- வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை!
அதேபோல், புதுச்சேரிக்கு நிர்மல்குமார் கரானா, பா.ஜ.க.வின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க.வின் அதிரடி அறிவிப்பால் மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே, தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்டக் கட்சிகள் பல்வேறு குழுக்களை அமைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.