Homeசெய்திகள்தமிழ்நாடுஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 15 பேர் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 15 பேர் கைது!

-

காரைநகர் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர்.

தங்களின் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டுவதாக கூறி, தாக்குதவது, கைது செய்வது, படகுகளை சிறைபிடிப்பது என இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இந்நிலையில், எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாவதுடன் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.. இதற்கு நிரந்தர தீர்வு கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்க - ராமதாஸ்..

இந்நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை அதிரடியாக கைது செய்துள்ளது. காரைநகர் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு நுழைந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து படகையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்து 15 பேர் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக மீனவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ