
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் பள்ளியில் மாணவர்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரவேற்றார். அப்போது, பள்ளி மாணவிகளுக்கு சாக்லேட் மற்றும் பூங்கொத்து கொடுத்து அமைச்சர் வரவேற்றார்.
தமிழகத்தில் 6 முதல் 12- ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு!
அதைத் தொடர்ந்து, வருகைப்பதிவு உள்ளிட்ட விவரங்களை ஆசிரியர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டறிந்தார். அத்துடன், மாணவிகளுக்கு பாடநூல், சீருடை, காலணி, புத்தகப்பை உள்ளிட்டவற்றையும் அமைச்சர் வழங்கினார்.
மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “மாணவர்களின் நலனே முக்கியம்; பள்ளிகளுக்கு வருகைப் புரிந்துள்ள மாணவ செல்வங்களுக்கு எனது வாழ்த்துகள். நன்றாக படித்துப் பெருமைச் சேர்க்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் 100% தேர்ச்சிக் கொடுக்க ஆசிரியர்கள், அதிகாரிகள் இலக்கு நிர்ணயிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 1.31 லட்சம் மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் ஆகஸ்ட் மாதம் வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். மாநில கல்விக் கொள்கை குறித்து குழு அறிக்கை அளித்த பின் முதலமைச்சரிடம் பேசி முடிவெடுக்கப்படும்.
மாணவர்களுக்கு இலவச லேப்டாப்- அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
வகுப்பறைகளில் குடிநீர் இருப்பதை தலைமையாசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். டெட் தேர்வில் தேர்ச்சிப் பெற்றோருக்கு போட்டித் தேர்வு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். 11- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நீக்குவது குறித்து எந்தவொரு ஆலோசனையும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.