Homeசெய்திகள்தமிழ்நாடுமதுரை கோட்டத்தில் தொழிநுட்ப பணி... மதுரை - ராமநாதபுரம் பாசஞ்சர் ரயில் ரத்து

மதுரை கோட்டத்தில் தொழிநுட்ப பணி… மதுரை – ராமநாதபுரம் பாசஞ்சர் ரயில் ரத்து

-

மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெறவுள்ள தொழிநுட்ப பணிகள் காரணமாக 5 நாட்களுக்கு மதுரை – ராமநாதபுரம் பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் குருவாயூர் – சென்னை எழும்பூர் ரயில் 4 நாட்களுக்கு மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெறவுள்ள தொழிநுட்ப பணிகள் காரணமாக
ஆகஸ்ட் 5, 6, 8, 9 மற்றும் 11 ஆகிய 5 நாட்களுக்கு மதுரை – ராமநாதபுரம் இடையேயான பாசஞ்சர் ரயில் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

இதேபோல், பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் – சென்னை எழும்பூர் ரயில் ஆகஸ்ட் 4, 5 ,8 மற்றும் 10 ஆகிய நாட்களுக்கு மதுரை, திண்டுக்கல் செல்லாமல் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் ரயில் ஆகஸ்ட் 8ஆம் தேதி திண்டுக்கல், மதுரை செல்லாமல், புதுக்கோட்டை, காரைக்குடி, விருதுநகர் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மயிலாடுதுறை – செங்கோட்டை விரைவு ரயில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி திண்டுக்கல், மதுரை செல்லாது செல்லாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் திருச்சி – காரைக்குடி டெமு ரயில் ஆகஸ்ட் 31 வரை காலை 10.15க்கு பதிலாக 4 மணி நேரம் 15 நிமிடங்கள் தாமதமாக மதியம் 2.30க்கு தாமதமாக புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

MUST READ