Homeசெய்திகள்தமிழ்நாடுடாஸ்மாக்கை கணினி மயமாக்க டெண்டர்

டாஸ்மாக்கை கணினி மயமாக்க டெண்டர்

-

டாஸ்மாக்கை கணினி மயமாக்க டெண்டர்

தமிழகத்தில் உள்ள 5 ஆயிரம் டாஸ்மாக் கடைகளை கணினி மயமாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

அதிகரிக்கிறது தேவை.. டெபிட், கிரெடிட் கார்டு 'ஸ்வைப் மெஷின்' வாங்குவது எப்படி தெரியுமா? | Procedures to buy Debit, credit cards swipe machine bank official explain to traders ...

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஸ்வைப் மெஷின்கள் பொருத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மதுபாட்டிலுக்கு இனி கூடுதல் விலை வசூலிக்க முடியாது என தமிழக அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள 5 ஆயிரம் டாஸ்மாக் கடைகளை கணினி மயமாக்கவும், உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தமும் கோரப்பட்டுள்ளது. மதுபானங்கள் உற்பத்தி, விற்பனை, மதுபானம் இருப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கையும் கணினி மயமாக்கப்பட உள்ளது.

4,810 டாஸ்மாக் கடைகளில் மின்னணு முறையில் பணம் செலுத்துவதற்கான வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அனைத்துக்கடைகளிலும் ஸ்வைப்பிங் மெஷின்கள் நிறுவ வங்கிகளுக்கு அழைப்பு விடுத்து ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. கணினி மயமாக்குவதன் மூலம் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ