தமிழகம் முழுவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
அரசு முறை பயணமாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி சென்றார். அவருடன் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் கட்சியினர் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.


அந்நிகழ்ச்சியில் 655 கோடி ரூபாய் மதிப்பிலான 5,639 திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
மேலும் 308 கோடி ரூபாய் மதிப்பிலான 5,951 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
79 கோடி ரூபாய் மதிப்பில் 22,716 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருதுகளை வழங்குவதுடன், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து பிற்பகல் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சன்னாசிப்பட்டியில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கி, மருத்துவத்துறை கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, அரசு மருத்துவமனைகளில் நிறுவப்பட்ட மருத்துவ கருவிகளின் சேவைகளை தொடங்கி வைக்கிறார்.
