சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.திமுக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறக்க நேர்ந்து, இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால், அவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என ஜூன் மாதம் மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக உறுப்பினர், 45 வயதான சரிதா, ஜூன் முதல் வாரத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார். சரிதாவிற்கு 17 மற்றும் 16 வயதில் இரண்டு மகன்கள் உள்ள நிலையில், உயிரிழந்த சரிதாவின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளருமான செஞ்சி மஸ்தான், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம் இறையாணூறை சேர்ந்த கண்ணனும் அவரது மனைவி சரிதாவும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு சரிதா இறந்து விட்டதை தெரிவித்தார். இதையொட்டி, மதுரையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்தபடி, சரிதாவின் கணவர் கண்ணன் மற்றும் மகன்கள் புவனேஷ் சந்திரகேஷ் ஆகிய மூவரையும் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வரவழைத்து, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கியதை செஞ்சி மஸ்தான் குறிப்பிட்டார்.

மேலும் 10 லட்சம் ரூபாய் நிதியை வழங்கிய முதல்வருக்கு சரிதாவின் கணவர் கண்ணனும் அவரது மகன்களும் நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்.
பிடி வாரண்ட்களை தாமதப்படுத்த கூடாது – காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு