Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கச்சி இறப்பை விசாரிக்க வந்த அக்கா அதிர்ச்சியில் மரணம்

தங்கச்சி இறப்பை விசாரிக்க வந்த அக்கா அதிர்ச்சியில் மரணம்

-

- Advertisement -

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூர் சவேரியார் தெருவை சேர்ந்தவர் சிறுமணி, இவரது மனைவி அன்னமுத்து (65) இவர், கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அன்னமுத்து மரணமடைந்தார். இவரது நல்லடக்கம் நேற்று சனிக்கிழமை ஆத்தூரில் நடைபெற்றது.

death

we-r-hiring

அன்னமுத்துவின் அக்கா அந்தோணியம்மாள் (70) சித்தையன்கோட்டை ஜான் தெருவில் வசித்து வருகிறார். இவர், நேற்று சனிக்கிழமை தங்கச்சியின் மரண செய்தி கேட்டு, துக்கம் விசாரிப்பதற்காக ஆத்தூருக்கு அந்தோணியம்மாள் வந்தார். அங்கு தங்கச்சியின் உடலைப் பார்த்து கதறி அழுதார். அப்போது, அந்தோணியம்மாளுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கமடைந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அந்தோணியம்மாளை சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, கொண்டு செல்லும் வழியில் அந்தோணியம்மாள் மரணமடைந்தார்.

தங்கச்சி இறந்த செய்தி கேட்டு, துக்கம் விசாரிக்க வந்த இடத்தில், நெஞ்சு வலியால் மயக்கமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அக்கா அந்தோணியம்மாள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தங்கச்சியும் அக்காவும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தங்கச்சி அன்னமுத்துவிற்கு பிச்சை ஆரோக்கியம் என்ற மகனும், அக்கா அந்தோணியம்மாளுக்கு மேரி என்ற மகளும் உள்ளனர்.

MUST READ