Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் அவகாசம் கேட்ட அமலாக்கத்துறை.... உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் அவகாசம் கேட்ட அமலாக்கத்துறை…. உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

-

செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் அவகாசம் கேட்ட அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

செந்தில்பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது. இந்த வழக்கில்  ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை

இந்நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான வழக்கில் மீண்டும் அவகாசம் கோரிய அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது அமலாக்கத்துறை இதுவரை 7 முறை எந்த காரணமும் இல்லாமல் வழக்கை ஒத்திவைக்க கோரியதாக செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

செந்தில் பாலாஜி வழக்கில் இன்றும் வாய்தா கேட்ட அமலாக்கத்துறையிடம், வாதாடுவதற்கு தயாராக இல்லை எனக்கூறி விசாரணையை தள்ளிவைக்க கோருவது என்ன மாதிரியான செயல்..? என நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்ட்டின் ஜார்ஜ் அடங்கிய அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைதது நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

MUST READ