ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனையின் தொடர்ச்சியாக சென்னை தலைமைச் செயலகத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமைச்சரை ஐ.பெரியசாமி அறைக்கு செல்லும் நுழைவாயில் கதவு பூட்டப்பட்டுள்ளது.அமைச்சர் ஐ. பெரியசாமி தொடர்புடைய திண்டுக்கல், மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தின் வளாக வாயிலில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலக வளாகத்திற்கு உள்ளே வரும் நபர்களின் அடையாள அட்டைகள் சோதிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் தலைமைச் செயலகத்தின் நான்காவது நுழைவு வாயில் அருகே உள்ள ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் அறைக்கு செல்லும் இரு நுழைவு வாயிலும் அமலாக்கத் துறையினர் முன் அனுமதியின்றி நுழைவதை தடுக்கும் வகையில் பூட்டப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபடுவதற்கான நீதிமன்றத்தின் முறையான உத்தரவோ அல்லது பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கரின் ஒப்புதலோ இல்லாமல், சோதனை செய்திட அனுமதி அளிக்கக் கூடாது என்னும் அடிப்படையில், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பது, குறிப்பிடத்தக்கது.
EDக்கும் அஞ்சமாட்டோம்! மோடிக்கும் அஞ்சமாட்டோம்! – ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்…
