Homeசெய்திகள்தமிழ்நாடுசொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து 2 அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து.... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து 2 அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து…. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

-

சொத்துக்குவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-11ம் ஆண்டுகளில் ரூ.76.40 லட்சம் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரது மனைவி மீது 2012ல் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்த நிலையில், லஞ்ச ஒழிப்பு துறை மேல் விசாரணை அறிக்கை அடிப்படையில் கடந்த 2022ல் தங்கம் தென்னரசுவை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

"டிச.16 முதல் நிவாரண தொகைக்கான டோக்கன்கள் வழங்கப்படும்"- அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
Video Crop Image

இதேபோல் ரூ.44.56 லட்சம் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீது 2012ல் லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்த வழக்கில், லஞ்ச ஒழிப்பு துறை மேல் விசாரணை அறிக்கை அடிப்படையில் 2023ல் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தள்ளுபடி!
File Photo

இந்த இரு உத்தரவுகளுக்கும் எதிராக 2023ல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்து, சாட்சி விசாரணையை துவங்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MUST READ