Homeசெய்திகள்தமிழ்நாடுபோலீசார் மீது ’துப்பாக்கி சூடு’ நடத்திய கைதி- கோவையில் பதற்றம்..!

போலீசார் மீது ’துப்பாக்கி சூடு’ நடத்திய கைதி- கோவையில் பதற்றம்..!

-

- Advertisement -

போலீசார் மீது ’துப்பாக்கி சூடு’ நடத்திய கைதி- கோவையில் பதற்றம்..!

கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய படுகொலை சம்பவம் சத்திய பாண்டி கொலை வழக்கு சம்பவம் . நடுரோட்டில் ரவுடி கும்பல் ஓட ஓட சத்திய பாண்டியை வெட்டியது. வீட்டில் நுழைந்த சத்யபாண்டியனை துப்பாக்கியால் சுட்டு கொன்றது. பெரும் பரபரப்பு ஏற்பட்ட இந்த சம்பவத்தின் அடிப்படையில் பந்தைய சாலை போலிஸார் 147, 148, 506 (2), 302, W27(3) Arms Act பிரிவின் கீழ் வழக்கு பதிந்திருக்கின்றனர்.

இந்த நிலையிலே குற்றவாளிகளை கைது செய்ய, கமிஷனர் பாலகிருஷ்ணன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில் சத்யபாண்டி வழக்கில் தனிப்பட்ட போலீசார் நடத்திய புலன் விசாரணை அடிப்படையில் குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டிருந்தனர். முக்கிய குற்றவாளி சஞ்சய் ராஜா தலைமறைவாகவே இருந்தார். போலீசாரின் தேடுதல் வேட்டை கிடையில் சென்னையில் நீதிமன்றத்தில் சரணடைந்த சஞ்சய் ராஜாவை, போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.

விசாரணையின் போது சஞ்சய் ராஜா துப்பாக்கி பயன்படுத்தும் நபர் என்பது தெரிய வந்தன. இந்த நிலையில் தான் ஒரு இடத்தில் துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாகவும், அதனை எடுத்து தருவதாகவும் கஷ்டத்தில் இருந்த சஞ்சய் ராஜா தனிப்படை விசாரணை போலீசாரிடம் தெரிவித்திருக்கின்றார் .

இந்த நிலையிலே காவல் ஆய்வாளர் கிருஷ்ண லீலா, உதவி ஆய்வாளர்கள் சந்திரமூர்த்தி, சந்திரசேகர், சிறப்பு உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார், முதுநிலை காவலர் ஸ்ரீதர் அடங்கியோர் தனிப்படை குழு, கரட்டுமேடு முருகன் கோயில் மலை சரிவிற்கு அழைத்துச் சென்றிருக்கின்றான். அப்போது தான் போலீசாரிடம் எடுத்து ஒப்படைப்பதாக தெரிவித்திருந்த அந்த துப்பாக்கியில், திடீரென்று போலீசாரையே பார்த்து சுட ஆரம்பித்தார். அப்பொழுது நொடி பொழுதில் காவல் ஆய்வாளர் கிருஷ்ண லீலா உயிர்தப்பி, தற்காத்துக் கொள்ள அருகில் இருந்த மரத்தின் பின்புறம் மறைந்திருக்கின்றார். பின்பு அவரை நோக்கி ’உன்னை கொள்ளாமல் விடமாட்டேன்’ என்று சொல்லிக்கொண்டு கொலை வெறியுடன் சஞ்சய் ராஜா சுட்டு இருக்கின்றார்.

உடனடியாக தங்களை தற்காத்துக் கொள்ள அங்கிருந்த உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தன்னிடமிருந்த துப்பாக்கியால் சஞ்சய் ராஜாவின் இடது முட்டியில் சுட்டிருக்கின்றார். இதில் இடது முட்டியில் காயம் ஏற்பட்ட பொழுது உடனடியாக தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை சஞ்சய் ராஜா கீழே போட்டு இருக்கின்றார். அப்பொழுது சட்டென்று விரைந்து சஞ்சய் ராஜாவை பிடித்த போலீசார், காயம் பட்ட சஞ்சய் ராஜாவை கோவை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

MUST READ