Homeசெய்திகள்தமிழ்நாடுகுட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை பற்றி கேள்வி எழுப்பியது உச்ச நீதிமன்றம்

குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை பற்றி கேள்வி எழுப்பியது உச்ச நீதிமன்றம்

-

தமிழ் நாட்டில் குட்கா மற்றும் புகையிலையை தடை செய்வது தொடர்பாக சட்டம் கொண்டுவருவது குறித்து ஏன் ஆலோசிக்க கூடாது என்று தமிழ்நாடு அரசிடம் கேள்வி எழுப்பி இருக்கிறது உச்ச நீதிமன்றம்.

குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை உள்ளிட்டற்றை தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணையச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்த தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் நாகரத்னா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் “மக்கள் நலனைக் கருத்தில் கொண்டே குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. குட்காவை நிரந்தரமாக தடைசெய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிடம் உள்ளது. எனவேதான் தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் தடைவிதித்து வருகிறது.

இந்த பொருட்களை புகைத்தால் கேன்சர் வராது என்று எப்படி கூற முடியும்? எனவேதான் தடையை நீட்டிக்கிறோம். சட்டத்திலிருந்து தப்புவதற்காக குட்காவையும், புகையிலையையும் தனித்தனியாக விற்கிறார்கள். மக்கள் அதனை வாங்கி சேர்த்து போதைப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிவித்தனர்.

தமிழக அரசின் நோட்டிபிக்கேசனுக்கு மட்டுமே உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தாலும் ரெகுலேஷனுக்கு தடை விதிக்கவில்லை என்பதால் அரசு ரெகுலேஷன் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், குட்கா மற்றும் புகையிலையை தடைசெய்ய ஏன் சட்டம் கொண்டுவரக் கூடாது என்றும் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பினார்கள்.

குட்கா, புகையிலையால் வாய் கேன்சர் வருவது குறித்துமாநில அரசு ஆலோசித்துள்ளதா ? என்று எதிர்மனுதாரர்களிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. வழக்கின் விசாரணை இன்று முடியாததால் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

MUST READ