spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகணவரின் குடும்பம் தன்னை பாலியல் விவகாரங்களுக்கு உட்படுத்துவதாக – பெண் புகாா்

கணவரின் குடும்பம் தன்னை பாலியல் விவகாரங்களுக்கு உட்படுத்துவதாக – பெண் புகாா்

-

- Advertisement -

கணவரின் குடும்பம் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் விவகாரங்களுக்கு உட்படுத்துவதாகவும் காவல்துறையனர் உரிய நடவடிக்கை எடுக்க மறுப்பதாக   பெண் ஒருவர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு  அளித்துள்ளார்.கணவரின் குடும்பம் தன்னை பாலியல் விவகாரங்களுக்கு உட்படுத்துவதாக – பெண் புகாா்

கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்தவர் செஜா கேத்தரின் இவருக்கும் உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது இந்நிலையில் உதயகுமாரின் குடும்பத்தார் தான் வசதி வாய்ப்பற்றவள் எனக் கூறி அவர்களுக்குத் தெரிந்த ரியல் எஸ்டேட் அதிபர் வேலுச்சாமி என்பவர் உடன் பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு வழங்குமாறு வற்புறுத்தியதாகவும்,  அதற்கு தான் இனங்க மறுத்ததால் தன்னை காரில் கடத்தி தொழிலதிபர் கெஸ்ட் ஹவுஸில் கட்டாயப்படுத்தி பாலியல் தொடர்பு வைத்துக்கொள்ள மாமியார் சுமதி முயற்சித்ததாகவும் புகார் அளித்துள்ள கேத்தரின்,  இது தொடர்பாக தனது கணவரும் மாமனார் ஞானசேகரன் ஆகியோரிடம்  தெரிவித்த போது  அவர்களும் இவ்விவகாரத்தில் உடந்தையாக செயல்பட்டதால்,  வீட்டை விட்டுச் சென்ற  கேத்தரின்.  உடுமலைப்பேட்டை காவல் நிலையம் மற்றும் துணை  மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோரிடம் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்தும்,  உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் காவல்துறை தரப்பில் உடனடியாக தன்னை இந்நிலைக்கு  ஆளாக்கிய மேற்கண்ட  நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மனு அளித்தார்.

பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் ஐ.ஜி., முருகனுக்கு பிடிவாரண்ட்… சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

we-r-hiring

MUST READ