spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆம்ஸ்ட்ராங் கொலையில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை - திருமாவளவன் பேட்டி

ஆம்ஸ்ட்ராங் கொலையில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை – திருமாவளவன் பேட்டி

-

- Advertisement -

ஆம்ஸ்ட்ராங் கொலையில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

we-r-hiring

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி அஞ்சலி செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆம்ஸ்ட்ராங் கொலையில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை; உண்மை குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். 8 பேர் சரணடைந்துவிட்டதால் புலன் விசாரணையை காவல்துறை முடித்து விடக் கூடாது; தமிழ்நாட்டில் தலித்துகள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவது நீடிக்கிறது. கூலிப் படைக் கும்பலை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும்; ஆம்ஸ்ட்ராங் போன்றோருக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். கூலிப்படை கும்பலை, சாதியவாத கும்பலை தடுக்கத் தவறினால் தமிழ்நாடு அரசுக்கு மேலும் களங்கம் ஏற்படும் என்றார்.

 

 

 

MUST READ