இந்து மதத்தில் சகோதரத்துவம் இல்லை- திருமாவளவன்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடந்தது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்காதது, ஸ்டெர்லைட் பிரச்சினை குறித்தும் மற்றும் சனாதன ஆதரவு பேச்சுகள் குறித்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி எந்தவித வருத்தமும், விளக்கமும் அளிக்காததை கண்டித்தும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய விசிக தலைவர், “இந்தியாவில் அரசு மதமாக இந்து மதத்தை கொண்டு வர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறார்கள். இந்து மதம் அரசு மதமாக வந்தால் இந்து மத கேடுகள் வரும். இந்து மதத்தில் சகோதரத்துவம் இல்லை. கிறித்துவத்தில், இஸ்லாமியத்தில் சகோதரத்துவம் உள்ளது.
ஆளுநர் என்பவர் மத்திய அரசின் முகவர். அவர் ஆர்.எஸ்.எஸ். கொள்கையில் கொண்ட ஈடுபாட்டால் தான் அவருக்கு அம்பேத்கர், பெரியார் போன்ற பெயர் கசக்கிறது. ஆளுநர்களை நியமிக்கும்போது முதல்வர்களின் ஒப்புதலை பெற வேண்டும் என்ற பூஞ்சி அறிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பாஜக ஆட்சியில் இல்லாத மாநில முதல்வர்களை தமிழக முதல்வர் ஒருங்கிணைக்க வேண்டும்” என்றார்.