Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவையாறு தியாகராஜர் 176வது ஆராதனை விழா கோலாகலம்

திருவையாறு தியாகராஜர் 176வது ஆராதனை விழா கோலாகலம்

-

- Advertisement -

திருவையாறில் தியாகராஜர் 176வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் பாடும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது.

thiyagarajar

we-r-hiring

கர்நாடக சங்கீத மேதை சத்குரு தியாகராஜரின் 176 வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அனைத்து இசைக்கலைஞர்களும் சேர்ந்து இசைத்து அஞ்சலி செலுத்தும் பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் இசைக்கும் நிகழ்ச்சி திருவையாறு காவிரி கரையில் கோலாகலமாக நடைபெற்றது. அதே நேரம் தியாகராஜரின் திருஉருவச் சிலைக்கு பால், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகம் ஒரு மணிநேரம் நடைபெற்றது.

கர்நாடக இசைக் கலைஞர்களால் சத்குரு என்று போற்றி வணங்கப்படும் தியாகராஜர், ராமனை நினைத்து உள்ளம் உருகி 24 ஆயிரம் சங்கீத கீர்த்தனைகளை இயற்றி பாடியுள்ளார். வயது மூப்பு காரணத்தால் திருவையாறு காவிரி கரையில் முக்தி அடைந்த தியாகராஜருக்கு, அவரது கீர்த்தனைகளை இசைத்து புகழ் பெறும் இசைக்கலைஞர்கள் ஒன்று கூடி ஆராதனை விழா எடுத்துவருகின்றனர்.

அதன்படி, 176-வது ஆராதனை விழா கடந்த 6ம் தேதி துவங்கியது. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் விழாவை துவக்கிவைத்தார். ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சியை யொட்டி, சுதா ரகுநாதன், ஓ.எஸ்.அருண், மஹதி உள்ளிட்ட ஏராளமான இசைக்கலைஞர்கள் அனைத்து இசைக்கருவிகளையும் இசைத்து தியாகராஜர் இயற்றிய 5 முக்கிய கீர்த்தனைகளை இசைத்து அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு ஆளுநர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, அரியலூர், திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

MUST READ