உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தாக்க முயன்ற சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை தாக்க முயன்ற சம்பவத்தை கண்டித்து, சென்னை உயர்நீதிமன்ற ஆவின் நுழைவாயில் முன்பு , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்வேறு வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளை பங்கேற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், “இன்றைக்கு சனாதனிகளுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக அமர்ந்திருக்கிறார் அவர்களால் தவிர்க்க முடியவில்லை இவரை தடுக்க முடியவில்லை , இப்படி ஒரு செயல் நடந்த போது அவர் சொன்ன வார்த்தைகள் இரண்டே வார்த்தைகள் தான் கவனத்தை சிதற விடாதீர்கள் இது என்னை பாதிக்காது என்று சொல்லி இருக்கிறார். கவனத்தை சிதற வைப்பதற்கு அவர்கள் முயற்சிக்கிறார்கள் நாம் சிதறி விட கூடாது இது என்னை பாதிக்காது ஒரு உண்மையான பகுத்தறிவின் கூற்று.
பி.ஆர்.கவாய் அவர்களை அவர் ஒரு தலித் என்கிற அடிப்படையிலேயே நாம் இந்த பிரச்சனையை அணுகவில்லை அவர்களை அவமதித்து இருப்பது என்பது ஒட்டுமொத்த நீதித்துறைக்கே தலைகுனிவு.
இது ஒவ்வொரு வழக்கறிஞரும் ஒவ்வொரு நீதிபதியும் உணர்ந்து இருக்க வேண்டும் உணர்ந்து இருந்தால் இந்நேரம் நீதித்துறையை சார்ந்தவர்களின் கண்டனம் வலுவாக இருந்திருக்கும். ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும், பிரச்சனை அவர் சனாதனத்தை தீவிரமாக எதிர்க்கிறார் என்பது தான் பிரச்சனை.
இது தலித், தலித் அல்லாதோர் பிரச்சினை அல்ல,இது ஜனநாயக சக்திகளுக்கும் சனாதன சக்திகளுக்கும் இடையிலான யுத்தம், இதுதான் பிரச்சனை அவர் அதற்கு சவாலாக இருக்கிறார். பகுத்தறிவோடு செயல்படுகிறார் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு செயல்படுகிறார். அரசமைப்புச் சட்டத்தின் விழுமையங்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் விழிப்பாக இருக்கிறார் இதுதான் அவர்களுக்கு பிடிக்கவில்லை.
இப்போது சமூக ஊடகங்களில் பரவிக் கொண்டிருக்கிற செய்தி, ஆறு மாதங்களாகவே இதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று ஆதாரப்பூர்வத்தோடு இப்போது வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக அவரை அவமதிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்கிற வெறுப்பு ஏற்கனவே திட்டமிட்டு பரப்பப்பட்டிருக்கிறது, விவாதிக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே இது திடீர் நிகழ்ந்த அல்ல, இது திட்டமிட்ட ஒன்று. ஏற்கனவே இவர்கள் பேசி இருக்கிறார்கள் சில கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார் இதுதான் பிரச்சனை.
இவ்வளவு பெரிய சம்பவம் நடந்து நாடே இது குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறது. அதுவரையில் பிரதமர் மோடி அவர்கள் அதற்காக எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. இப்படி நடந்திருக்கக் கூடாது என தன்னுடைய வருத்தத்தை மட்டும் பதிவு செய்திருக்கிறார் பிரதமர் மோடி இதுதான் அவர்களின் மனநிலை.
ஆர்எஸ்எஸ், பிஜேபி ,விசுவ ஹிந்து பரிஷத் எல்லோரும் இப்போது வரிந்து கட்டிக்கொண்டு ராஜேஷ் கிஷோருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்கிறார்கள். இது ஒரு யுத்தம், ஒரு சனாதன சங்கி உச்சநீதிமன்றத்தை எந்த அளவுக்கு கீழாக மதிக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று இருக்க முடியாது. வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்றத்தை மதிக்க வேண்டும் என்கிற பொறுப்போ கடமையோ இல்லையா. தலைமை நீதிபதி யாராக இருந்தாலும் எந்த மதமாக இருந்தாலும் எந்த ஜாதியாக இருந்தாலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பீடத்தில் அமர்ந்திருக்கிறார் .
அந்த நபரை சர்வ சாதாரணமான நிலையில் காலில் கிடப்பதை கழட்டி வீச ஒருவர் முயற்சிக்கிறார் என்று சொன்னால் அவருடைய உளவியல் எத்தனை மோசமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் அவர்களுடைய ஆட்சி தொடருமே ஆனால் நாட்டின் நிலை என்ன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இது ஒட்டுமொத்த ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான தாக்குதல்.
உச்ச நீதிமன்றத்தை தலை குனிய வைத்திருக்கிற ஒரு முற்போக்குத்தனமான தாக்குதல், உலக அரங்கில் இந்திய தேசத்திற்கு நேர்ந்த தலை குனிவு, இதை வழக்கறிஞர் சமூகமும் நீதிபதிகளும் மிகக் கடுமையாக கண்டிப்பதற்கு முன்வர வேண்டும். இது அரசமைப்புச் சட்டத்தையும் உச்சநீதிமன்றத்தையும் இந்திய ஜனநாயகத்தையும் கொச்சைப்படுத்துகிற நடவடிக்கையா இல்லையா. இந்த கோணத்தில் தான் இதை நாம் அணுக வேண்டும். இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அவருடைய வழக்குரைஞர் தகுதியை முற்றும் முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். அவரை உடனடியாக கைது செய்து சிறைப்படுத்த வேண்டும்.
இனி யாரும் அப்படிப்பட்ட முயற்சியிலே ஈடுபடவே கூடாது என்ற நிலையை உருவாக்க வேண்டும். அப்போதுதான் நாம் இந்த அரசமைப்புச் சட்டத்திற்கு உரிய மரியாதை கொடுக்க முன்வந்திருக்கிறோம் என்று பொருள். ஜனநாயகத்தை பாதுகாக்க கூடிய ஒரு பாதுகாப்பு அரண் உச்ச நீதிமன்றம். அந்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை பீடத்தையே களங்கப்படுத்தி இருக்கிறார்கள் என்கிறபோது நாடு வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல. இப்படிப்பட்ட இந்த சக்திகளுக்கு எதிரான இந்த யுத்தத்திலே நாம் ஓரணியில் திரளுவோம். தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய அளவில் ஒட்டுமொத்த இந்தியாவே ஓரணியில் திரள வேண்டும். தேர்தல் கணக்குக்காக நான் சொல்லவில்லை ஜனநாயகத்தை பாதுகாப்பது,அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பது அது சொல்லுகிற நீதி சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்கிற அந்த விழுமியங்களை பாதுகாப்பது நம் ஒவ்வொருவருக்குமான கடமை. குறிப்பாக வழக்கறிஞர்களின் மிக முக்கியமான கடமை என்று குறிப்பிட்டுள்ளாா்.
வெறும் 300 ரூபாய்க்காக ஆட்டோ ஓட்டுநரிடம் சண்டை போட்ட ஆடம்பர பெண்…