
சர்வதேச பிரச்சனைகளால் ஏற்பட்டுள்ள தாக்கங்களால் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

“குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை உறுதிச் செய்வோம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
கடந்த நிதியாண்டில், நாட்டில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 970 கோடி ரூபாய்க்கு ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது. நாட்டின் ஆடை ஏற்றுமதியில் 48% திருப்பூர் பூர்த்திச் செய்து வந்தது. எனினும், ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் சூழல், பருத்தி விலை உயர்வு காரணமாக, கடந்த நிதியாண்டில் தொடக்கம் முதல் ஆடை ஏற்றுமதி சுணக்கமாக இருந்தது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 12 ஆயிரத்து 2 கோடி ரூபாய்க்கு ஆடை ஏற்றுமதி நடந்தது. நடப்பாண்டில் 9 ஆயிரத்து 930 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே ஏற்றுமதி நடந்துள்ளது.
மூன்று நாள் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கும் பிரதமர் நரேந்திர மோடி!
இதனால் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.


