
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024- 2025 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்.19) காலை 10.00 மணிக்கு தாக்கல் செய்து உரையாற்றினார்.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 4 பேர் கைது!
சட்டப்பேரவையில் பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்நாட்டில் முதன்மை நதிகள் புனரமைப்பிற்கான திட்டங்கள் அறிவிக்கப்படும். பூந்தமல்லியில் ரூபாய் 500 கோடி ஒதுக்கீட்டில் அதிநவீனத் திரைப்பட நகரம் அமைக்கப்படும். சென்னை அடையாறு நதியைச் சீரமைக்க ரூபாய் 1,500 கோடி நிதி ஒதுக்கப்படும். சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கோவளம், பெசன்ட் நகர் கடற்கரைகள் மேம்படுத்தப்படும்.
மகளிர் இலவச பேருந்து திட்டம் மலைப்பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்; 5 லட்சம் ஏழைக் குடும்பங்களைக் கண்டறிந்து வறுமையை அகற்றிட தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய நிறுவனம் அமைக்கப்படும். 5,000 ஏரி, குளங்களை புனரமைக்க ரூபாய் 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
மூன்றாம் பாலினத்தவர்களின் பள்ளி, கல்லூரிக் கட்டணத்தையும், விடுதிக் கட்டணத்தையும் அரசே ஏற்கும். முதலமைச்சரின் காலை உணவுத் த்திட்டம் ஊரகப் பகுதிகளில் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். 10,000 சுய உதவிக்குழுக்கள் புதிதாக உருவாக்கப்படும். பள்ளிக்கல்வித்துறைக்கு ரூபாய் 44,042 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்!
பேராசிரியர் அன்பழகன் திட்டத்தின் கீழ் ரூபாய் 1,000 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும். இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.