
வந்தவாசியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்களை காவல்துறையினர், சினிமா படப்பாணியில் விரட்டிச் சென்றுப் பிடித்தனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் 2024 இன்று தாக்கலாகிறது!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி காந்தி சாலையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். காவல்துறையினரைக் கண்டதும், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் அதிவேகமாக வாகனத்தை இயக்கி எதிரே வந்த வாகனத்தின் மீது மோதினர்.
இதனைக் கண்ட டி.எஸ்.பி. மற்றும் காவல்துறையினர், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களைத் துரத்திச் சென்று பிடித்தனர். அவர்களிடம் சோதனையிட்டதில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் 17 வயது சிறுவனுடன் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், இந்த சம்பவத்தில் தொடர்புடைய பரத், ரவி ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். கைதானவர்களிடம் இருந்து 30,000 ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களையும், 3 இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
‘தமிழ்நாடு பட்ஜெட் 2024’: மாபெரும் 7 தமிழ்க்கனவு- பட்ஜெட் சாராம்சம்!
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கைதான மூன்று பேர் வேலூர் மத்திய சிறையிலும், சிறுவன் கடலூர் சிறார் சீர்த்திருத்தப்பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.