spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் நாளை உலக முதலீட்டாளர்கள் மாநாடு!

சென்னையில் நாளை உலக முதலீட்டாளர்கள் மாநாடு!

-

- Advertisement -

 

சென்னையில் நாளை உலக முதலீட்டாளர்கள் மாநாடு!

we-r-hiring

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை (ஜன.07) தொடங்குகிறது. இரண்டு நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நாளை (ஜன.07) காலை 10.00 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.

விடாமுயற்சியில் இரண்டு அர்ஜுனா?…… இது என்னடா புது ட்விஸ்டா இருக்கு!

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூபாய் 5.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மாநாட்டில் முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தம், தொழிற்கொள்கை, கருத்தரங்குகள், கண்காட்சி நடைபெறுகிறது.

முதலீட்டாளர்கள் மாநாட்டில் முன்னணி தொழிலதிபர்கள் உள்பட 10,000 பேர் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் உள்ள எல்லையற்ற தொழில் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

காலத்தை வென்ற ‘கலைஞர் 100’ விழா சிறப்பு ஏற்பாடுகள்……கலைஞராக நடிக்கும் நட்சத்திரங்கள்!

இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், அடிடாஸ், போயிங், ஹூண்டாய், ஹோண்டா, சிடிஎஸ், டெஸ்லா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களும், டாடா, அதானி, அசோக்லைலேண்ட், மாருதி சுஸுகி உள்ளிட்ட இந்திய நிறுவனங்களும் பங்கேற்கவுள்ளனர். இதில் பல லட்சம் கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. ஏற்கனவே, முன்னணி நிறுவனங்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், இறுதி முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாகவும், மாநாட்டின் போது ஒப்பந்தகங்கள் இறுதிச் செய்யப்படும் என்று தகவல் கூறுகின்றன.

MUST READ