Homeசெய்திகள்தமிழ்நாடுஉரையில் ‘திராவிட மாடல்’-ஐ தவிர்த்த ஆளுநர்

உரையில் ‘திராவிட மாடல்’-ஐ தவிர்த்த ஆளுநர்

-

- Advertisement -

சட்டப்பேரவை உரையில் திராவிட மாடல் ஆட்சி என இருந்த நிலையில் அந்த வாக்கியத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி பேசாமல் தவிர்த்தார்.

rn ravi

we-r-hiring

ஆளுநர் மாளிகையிலிருந்து புறப்பட்டு 9.50 மணிக்கு சட்டசபைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை புரிந்தார். அவரை சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் அப்பாவு , சட்டசபை செயலாளர் ஆகியோர் வரவேற்றனர். சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ரவியை வரவேற்று மரபுபடி சட்டசபைக்குள் அழைத்து சென்றார்.

இந்தியா டுடே பத்திரிகை ஆய்வில் தமிழ்நாடு முதலிடம் பிடித்தது ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு கிடைத்திருக்கும் நற்சான்று என மூன்றாம் பக்கத்தின் முதல் பாராவில் இடம்பெற்றிருந்தது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி திராவிட மாடல் என்ற வார்த்தையை படிக்காதவில்லை. ஆளுநர் ரவி திராவிட மாடல் ஆட்சி என்ற வார்த்தையை தவிர்த்துவிட்ட நிலையில், சபாநாயகர் அப்பாவு திராவிட மாடல் என்று இருமுறை அழுத்தமாக கூறி தமிழில் ஆளுநர் உரையை வாசித்தார். மாறாக ”வாழிய தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த்” என தனது உரையை நிறைவு செய்தார் ஆளுநர் ரவி.

2023 ஆம் ஆண்டு முதல் காகிதம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் ஆளுநர் உரை வாசிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் ஆளுநர் வாசிக்கும் உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு மொழிபெயர்த்தார். அப்பாவு மொழிபெயர்க்கும் வரை சட்டசபையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அமர்ந்திருந்தார்.

MUST READ