spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபொதுக்கூட்டங்களுக்கு ரூ.20 லட்சம் டெபாசிட் தொகை.!! ஷாக்கான அரசியல் கட்சிகள்..

பொதுக்கூட்டங்களுக்கு ரூ.20 லட்சம் டெபாசிட் தொகை.!! ஷாக்கான அரசியல் கட்சிகள்..

-

- Advertisement -


அரசியல் கட்சிகளில் ரோடு ஷோ, பிரச்சார கூட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அரசியல் கட்சித் தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்வுகள், பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் வகுத்து சமர்ப்பிக்குமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் கடந்த 27ம் தேதி உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், வழிகாட்டுதல்களை உருவாக்க இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலாளார் தலையில், மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள, அங்கிகரீக்கப்பட்ட 20 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி தேசிய கட்சிகளான, காங்கிரஸ், பாஜக, சிபிஎம், ஆம் ஆத்மி, தேசிய மக்கள் கட்சி, பகுஜன் சமாஜ், அங்கிகரீக்கப்பட்ட மாநில கட்சிளான, திமுக, அதிமுக, தேமுதிக, சிபிஐ, விசிக, நாம் தமிழர் மற்றும் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட பாமக, மதிமுக, தவாக, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, புரட்சி பாரதம், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

we-r-hiring

ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அப்போது ரோடு ஷோ நடத்தக்கூடாது என சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அரசியல் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகளின் போது பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்றும், பரப்புரைகள் மற்றும் பொதுக்கூட்டங்களை கண்காணிக்க மற்றும் அனுமதி வழங்க குழு அமைக்கப்படும் என்றும் , துக்கூட்டங்களில் மக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப போலீஸாரை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற அரசியல் நிகழ்ச்சிகளுக்கு முன் 2 மணி நேரத்திற்கும் மேலாக மக்கள் காத்திருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்களை 3 மணி நேரங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் 10 நாட்களுக்கு முன்னதாகவே , 15 நாட்களுக்கு மிகாமல் கூட்டங்கள் மற்றும் பொது இடங்களில் பரப்புரைகளுக்கு அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பொதுக்கூட்டங்களுக்கு முன்னதாக அரசியல் கட்சிகளுக்கு டெபாசிட் தொகையை நிர்ணயிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பை 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு ரூ, 1 லட்சம் டெபாசிட் தொகையாகவும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு ரூ. 20 லட்சம் டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

MUST READ