ஆன்மிகத் தலைவர் நாராயண குருவின் பிறந்த நாளையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 3 வட்டங்களுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆன்மிகத் தலைவரும், சமூக சீர்திருத்தவாதியுமான நாராயண குருவின் பிறந்த தினத்தை ஒட்டி நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, திருவட்டார் ஆகிய 3 வட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் நாளை அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமையான 14ஆம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்படி 3 வட்டங்களில் உள்ளூர் விடுமுறையினை துய்க்கும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும் என்றும் ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.