Homeசெய்திகள்தமிழ்நாடுஉளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் மரத்தின் மீது மோதி விபத்து - 6 பேர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் மரத்தின் மீது மோதி விபத்து – 6 பேர் பலி

-

உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் மரத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் வாழைப்பந்தல் பகுதியை சேர்ந்த 20 பேர் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுவிட்டு, சுற்றுலா வேனில் சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள மேட்டத்தூர் என்ற இடத்தில் சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபொழுது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டு இழந்த வேன் சாலையின் இடது புறத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். விபத்து காரணமாக சென்னை – திருச்சி நான்குவழி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

MUST READ